ஆதியாகமம் நமது பரிசுத்த வேதாகமத்தின் முதல் நூல். மனித உயிரின் ஆரம்பத்தைக் குறித்த பதிவுகளை ஒரு சேர பதிவு செய்துள்ளது இன்னூல். பிறப்பும் இறப்பும், பாவமும் மீட்பும், திருமணமும் ஆளுமையும் என மனித இன வரலாற்றின் இயல்பையும், மனித இனத்திற்கான கடவுளின் நோக்கத்தையும் இன்னூலே ஆரம்பமாக அமைகிறது.
கடவுள் தமது சாயலில் மனிதனை உருவாக்கினார். கடவுளின் அனைத்து படைப்புகளும் அவரை ஒருவித்ததில் வெளிப்படுத்துக்கின்றன. அவரது சாயலில் படைக்கப்பட்ட மனிதன் அவரது குணத்தையும் பண்பையும் வெளிப்படுத்தவே படைக்கப்பட்டான். ஆனால் மனிதனின் வீழ்ச்சி அவனை கடவுளிடமிருந்து விலகி செல்ல காரண்மாய்யிற்று. மனிதனின் இந்த பாவ வீழ்ச்சி மனிதனுக்கு இறுதியாகிவிட முடியாது. ஆனால் கடவுளுடான உறவையும், மனிதர்களுடான உறவையும் அது பாதிக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் விசுவாசத்தின் மூலம் நாம் இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வெற்றிக்கொள்ள முடியும். அவ்வாறு வெற்றிக்கொண்ட ஒவ்வொரு விசுவாசியும் தன் வாழ்வில் அவரின் வழியில் பயணிக்க வேண்டும். சங்கீத காரன் கூறுவது போல் கடவுளை நமக்கு வழியை தெரியப்படுத்துகிறார்.
”ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு”
சங்கீதம் 16:11.
கடவுளை முழுமையாக தெரிந்துகொள்ளுதலே, மனிதனை முழுமையாக்கும் (பரிசுத்தரின் அறிவே அறிவு நீதிமொழிகள் 9:10).
ஆதியாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மனித இன மூதாயையரின் பதிவுகள் பல கறைபடிந்தவையே, எனினும் அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் நாம் கடவுளுடன் பயணிக்க நமக்கு பல பாடங்களைக் கற்று தருகின்றன். இந்த வீழ்ந்த மனிதர்கள் எவ்வாறு எழுந்து நின்றனர் என்பதிலிருந்து, நம் வீழ்விலிருந்து நாம் எப்படி எழுந்து நிற்க முடியும் என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.
- ஆபேலைப் போல் ஆராதிக்க வேண்டும் (Worship like Abel)
- ஏனோக்கைப் போல் நடக்க வேண்டும் (Walk like Enoch)
- நோவாவைப் போல் கீழ்ப்படிய வேண்டும் (Obey like Noah)
- ஆபிரகாமைப் போல் விசுவாசிக்க வேண்டும் (Believe like Abraham)
- மெல்கிதேசேக்கைப் போல் ஆசீர்வதிக்க வேண்டும் (Bless like Melchizedek)
- ஏலியேசரைப் போல் ஜெபம் செய்ய வேண்டும் (Pray like Elizer)
- ஈசாக்கைப் போல் அனுசரிக்க வேண்டும் (Submit like Isaac)
- யாக்கோப்பைப் போல் உழைக்க வேண்டும் (Work like Jacob)
- ஏசாவைப் போல் மன்னிக்க வேண்டும் (Forgive like Esau)
- லேயாளைப் போல் விசுவாசத்தில் வளர வேண்டும் (Grow in faith like Leah)
- யூதாவை போல் மனம்திரும்ப வேண்டும் (Repent like Judah)
- தாமாரைப் போல் தெரிந்துக்கொள்ள வேண்டும் (Choose like Tamar)
- யோசேப்பை போல் தலைமையேற்க வேண்டும் (Lead like Joseph)
- இவ்வனைத்தையும் செய்ய இயேசுவைப் போல் மாற வேண்டும் (To do it all be like Jesus)
2021 ஆம் ஆண்டின் லெந்து நாட்களுக்குள் பயணிக்க இருக்கிறோம். ஆதியாகம மூதாதையரின் வாழ்க்கை நிகழ்வுகளோடு கூட பயணிப்போமா? எனது வலைப் பக்கத்தில் என்னுடன் இணைந்திருங்கள்
👆👆👆👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏