The world offers you Promises but its full of emptiness, but the Empty Tomb of Easter offers your Emptiness but full of Promises.

Resurrection of Jesus Christ is an Unexpected Reality, It’s factual. It is fundamental to Christian faith. The empty tomb on that eventual day stands as a witness to the reality of Resurrection. The soldiers who guarded the tomb saw the empty tomb, the Women who followed Jesus saw the empty tomb, the disciples of Christ saw the empty tomb. In it emptiness, Resurrection is full of Promises.

I will list down six key significant Promises that Resurrection offers (Taking this from the Easter Sermon by Rev. Francis GSM today).

1) Resurrection is the Foundation to Church & Christian Faith
திருச்சபைக்கும் விசுவாசத்திற்கும் அடித்தளம்1
2) Resurrection Promises New Hope to the believer
உயிர்தெழுதல் புதிய நம்பிக்கையை தருகிறது2
3) Resurrection Promises New Power to the believer
உயிர்தெழுதல் புதிய வல்லமையை தருகிறது3
4) Resurrection constructs the Church
உயிர்தெழுதலில் திருச்பைக் கட்டப்படுகிறது4
5) Resurrection offers Victory over Death
உயிர்தெழுதல் சாவுக்கே சாவு மணி அடிக்கிறது5
6) Resurrection removes the Fear of our hearts
உயிர்தெழுதல் பயத்தை நீக்குகிறது6

1) ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

1 கொரிந்தியர் 15:22,23

2) நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்

1 பேதுரு 1:3

3) கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்

பிலிப்பியர் 3:10

4) கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:32,41

5) கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை

ரோமர் 6:8

6) அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.

யோவான் 20:19