சிலுவை அழகானது. சிலுவை பாதுக்காப்பின் சின்னம். மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் அடையாளப்படுத்தும் குறியீடும் சிலுவை.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிலுவை கோரமானது. ரோம பேரரசு மரணத்தண்டனையை நிறைவேற்றிட பயன்படுத்தியது சிலுவையை.

இந்த கோர சிலுவையை அழகானததாக பாதுக்காப்பின் குறியீடாக மாற்றியவரே நம் அருள் நாதர் இயேசு கிறிஸ்து.

பாவம் (sin) என்றால் கிரேக்க மொழியில் Hamartia. இதன் பொருள் “இலக்கைத் தவற விடுதல்” (Missing the mark). மனிதர்களாய் நாம் நம் இலக்குகளை தவறவிடுகிறோம். தந்தையாக, தாய்யாக, மகனாக, மகளாக, அண்ணனாக, அக்காவாக, மாமாவாக, மாமியாக, மாணவனாக, ஆசிரியராக, அதிகாரியாக, நண்பராக, நாட்டின் குடிமக்களாக…இவ்வாறு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் தவறுக்கிறோம்.

முழுநிறைவை நாம் கிறிஸ்துவில் மட்டுமே காண்கிறோம். அன்பின் திருவுருவாய். பேரன்பின் திருவடிவாய், பேராளுளின் திருவெளிபாடாய் பூவுலகில் வாழ்ந்து, கோர சிலுவை மரணத்தை ஏற்று, மரித்து உயிர்தெழுந்த கிறிஸ்துவில் நாம் முழுமையைக் காண்கிறோம். நாம் நமது குறைகளை, நமது இயலாமையை உணர்ந்து ஒப்புக்கொள்ளுபவர்களாக மாற வேண்டும்a. அவரை நம் பாதுக்காவலராக, மீட்பராக, இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போதுb அவரின் முழுமை அவரின் முழுநிறைவு அவரின் மாட்சிமையை பெற்று அவரின் பிள்ளைகளாகும் படியான பெறும் பெரும்பேறு பெறுக்கின்றோம்c.

கிறிஸ்துவின் ஓளி நாம் தவற விட்ட இடைவெளியை நமக்கு வெளிப்படுத்திd, அதை சமன்செய்யும் படி நமக்கு பெலன் தரும். கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு நம் இலக்குகளை நோக்கி பயணிப்போம். அவர் திருமுன் (பிரசன்னம்) அனைத்தும் சாத்தியமே. கிறிஸ்துவின் சாயலை, கிறிஸ்துவின் இயல்பை பற்றித் தொடருவோம்.

கோரச்சிலுவையை அழகாய் மாற்றிய கோவே !! கிறிஸ்துவே !! ஆமென்.

a) ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது.மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்

1 யோவான் 1:8-10

b) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்

யோவான் 3:16

c) அவரிடம் நம்பிக்கை கொண்டு
அவரை ஏற்றுக்கொண்ட
ஒவ்வொருவருக்கும் அவர்
கடவுளின் பிள்ளைகள் ஆகும்
உரிமையை அளித்தார்

யோவான் 1:12

d) அவரிடம் வாழ்வு இருந்தது;
அவ்வாழ்வு மனிதருக்கு
ஒளியாய் இருந்தது.
அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;
இருள் அதன்மேல்
வெற்றி கொள்ளவில்லை

யோவான் 1:4,5