இயேசு கிறிஸ்துவின் அருட்பணியின் முதல் 5 நாட்களும் அழகான சாட்சிகளாக இருந்தன

நாள் 1: இயேசுவின் வருகையைக் குறித்து யோவான் ஸ்னான்னின் சாட்சி (யோ 1:19-28)

நாள் 2: இயேசுவே உலகத்தின் இரட்சகர் என்ற யோவான் ஸ்னான்னின் சாட்சி  (யோ 1:29-34)

நாள் 3: இயேசுவின் முதற் சீடர்களிட்த்தில் யோவான் ஸ்னான்னின் சாட்சி (யோ 1:35-39)

நாள் 4: இயேசுவின் முதற் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் சாட்சி பகர்தல் (யோ 1:40-42)

நாள் 5: இயேசுவின் முதற் சீடர்கள் தங்கள் நண்பர்களிடத்தில் சாட்சி பகர்தல் (யோ 1:43-51)

இந்த ஐந்து நாட்களில் முக்கியமானதாக இரண்டாம் நாளில் இயேசு கிறிஸ்து வருவதைக் கண்டு யோவான் ஸ்னான் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சாட்சிபகிர்ந்தான்.

வேதத்தில் நான்கு ஆட்டுக்குட்டிகளைக் குறித்து நாம் காண்கிறோம்

  1. தனி மனிதனுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி – ஆதியாகமம் 3:21
  2. ஒரு குடும்பத்திற்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி – யாத்தி 12:3
  3. ஒரு தேசத்திற்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி – லேவி 16:15-16
  4. அனைத்துலகத்திற்காக சிலுவையில் பலியிடப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி – யோவான் 1:29

கிறிஸ்துவின் அன்பால் தேவக் கிருபையால் இந்த மீட்பை பெற்ற நாம், அவர் அன்பை உலக்கிற்கு பகிர கடமைப்பட்டிருக்கிறோம்.

உலகை பிணி சூழ்ந்திருக்கும், இந்த வேளையில் உலக இரட்சகர் தம் பணி ஆற்றுவோமா?