யோவான் நற்செய்தி நூலின் முதல் மூன்று வசனங்கள், கடவுளே படைப்பிற்கு காரணர் எனவும், கடவுளிடம் தொடக்கம் முதலாய் நிலையாய் இருந்த இருக்கின்ற இருக்கபோகிற வார்த்தையின் மூலமே உலகம் படைக்கப்பட்டது என பார்க்கிறோம். அவ்வார்த்தை கடவுளுமாய் இருப்பதாகவும் காண்கிறோம்.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
யோவான் 1:4-5
நான்காம், ஐந்தாம் வசனங்களில் நாம் மூன்று முக்கியம்மான பதங்களைப்பார்க்கிறோம்.
- வாழ்வு (ஜீவன்)
- ஒளி
- இருள்
வார்த்தையாகிய கடவுளிடம் வாழ்வு (ஜீவன்) இருக்கிறது. வாழ்வின் உறைவிடம் அவரே. வார்த்தையாகிய கடவுளிடம் இருக்கும் வாழ்வு மனிதர்க்கு ஒளியாய் இருக்கிறது. ஒளிரும் அவ்வொளியை இருள் வெற்றிக்கொள்ளவதில்லை.
வாழ்வு
வாழ்வும் ஒளியும் யோவான் நற்செய்தி நூலில் முக்கிய பதங்களாக அமைக்கின்றன. ’வாழ்வு’ என்ற பதம் முதலாம் அதிகாரத்திலும், கடைசியாக 20 ஆம் அதிகாரத்தில் 31 ஆம் வசனத்திலும் வருகிறது.
அபோஸ்தலனாகிய யோவான் இந்த பதத்தை அழிவின் எதிர்பதமாக இதை பயன்ப்படுத்துகிறார். பாவத்தின் ஆட்கொள்ளப்பட்டு மரணத்திற்கு ஆக்கினை தீர்ப்பளிக்கப்படுவதில் இருந்து மீட்ப்பெற ‘வாழ்வை (ஜீவனை)’ பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே யோவான் விளக்கும் செய்தி.
வாழ்வின் ஆதாராமாக இருப்பவர் கடவுள். அனைத்து படைப்புகளின் தொடக்கம் அவரே, பாவத்தில் வீழ்ந்த படைப்பின் மறு வாழ்வும் அவரே. வார்த்தையாய் படைத்தார், மனித சாயலேற்று கிறிஸ்துவாய் மீட்டு வாழ்வளித்தார்.
இருளகற்றும் ஓளி
இருளும் ஒழுங்கின்மையும் வெறுமையும் கடவுளுக்கு உகந்ததன்று. அவ்வாறு இருந்த உலகின் மீதே கடவுள் வெளிசத்தை உண்டாக்கினார் (ஆதி 1:3-4). படைப்பிலும் முதலானது ஒளி. மனிதனின் மறு உருவாக்கத்திலும் ( Transformation) முதன்மையானது கிறிஸ்துவென்னும் ஒளி.
கிறிஸ்துவென்னும் ஓளியைப் பெற்றுக்கொண்டு வாழ்வு பெற (ஜீவன் பெற) நாம் அழைக்கப்படுகிறோம். இதற்கு நாம் செய்ய வேண்டியவை மூன்று காரியங்கள்
- கிறிஸ்துவை கடவுளுடைய குமாரன் என விசுவாசிப்பது (விசுவாசம் Faith) – யோவான் 3:16, 20:31
- கிறிஸ்துவே வாழ்விற்கு உண்மையும் (சத்தியம்) வழியுமாக இருக்கிறார் என உறுதியுடன் ஒப்படைப்பது (உறுதி – Trust) – யோவான் 14:6, யோவான் 6:48-54
- கிறிஸ்துவின் மீது அன்புக்கொண்டு கீழ்ப்படிதல் (Love & Obedience) – யோவான் 15:9-12 அன்பு கீழ்படிதலை ஊக்குவிக்கும். கீழ்ப்படிதல் அன்பை வெளிப்படுத்தும். Love motivates obedience. Obedience demonstrates Love.
இந்த மூன்று காரியங்களையும் நாம் பின்பற்றும் போது கிறிஸ்துவின் ஒளி நம்மில் ஒளிரும், நாம் கிறிஸ்து வாழும் வாழ்வை பெறுவோம்.
கிறிஸ்துவே வாழ்வளிக்கும் ஒளி