God’s Love met the Demands of God’s Justice

இயேசு கிறிஸ்து ஏன் மரிப்பதற்காக வந்தார்? என்ற கேள்வி இன்று (22/02/2023) முதல் தொடங்கும் இந்த லெந்து காலத்தில் நாம் தியானிக்கவும் சிந்திக்கவும் ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஜாண் பைப்பர் (John Piper) “Fifty Reasons Why Jesus Came to Die” என்ற தனது புத்தகத்தில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்காக வந்த ஐம்பது காரணங்களைக் குறித்து விவரிக்கிறார்.

முதலாவது காரணமாக அவர் கூறுவது – கடவுளின் கடங்கோபத்தை ஏற்றுக்கொள்ளவதற்காக

அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம் நிருபத்தில் (திருமுகத்தில்) கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பினாலே கிறிஸ்துவை அனுப்பியதாக கூறுகிறார்.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது

1 யோவான் 4:10

நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது

1 யோவான் 4:10 (பொது மொழிபெயர்ப்பு)

கடவுள் நமக்கு உபாகமம் 6:5ல் கொடுத்த கட்டளையை நாம் மீறினோம்

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

உபாகமம் 6:5

உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்டம் 6:5 (பொது மொழிபெயர்ப்பு)

கடவுள் நீதிபரர், நாம் அப்படியல்ல, கடவுள் நம்மீது அன்பு கொண்டுள்ளார்; நாமோ அவர்மீது அன்பு கொள்ளவிலை. கடவுள் நீதிபராய் இருப்பதினால் தமது மகன் பாடுப்பட்டு மரிக்க தேவை இருக்கிறது. கடவுள் அன்பு கொண்டவராய் இல்லாவிட்டால், தனது மகனை அனுப்ப அவருக்கு விருப்பம் இருந்திருக்காது.

நமது கடவுள் அன்பு கொள்பவராகவும் நீதிபரருமாகவும் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பாடும் மரணமும், கடவுளின் கடுங்கோபத்தை ஏற்கவே. கடவுளின் முழுநிறைவான நீதியின் தேவையை கடவுளின் மட்டற்ற அன்பு பூர்த்திசெய்கிறது.

Ps: Adapted from John Piper’s – Fifty Reasons Why Jesus Came to Die