The Paradox: The Wrath-bearer was infinitely loved (To read in English)

இந்த லெந்துக்காலத்தில் இயேசு ஏன் மரிப்பதற்காக வந்தார் என்ற கேள்விக்கு, முதலாம் காரணமாக – கடவுளின் கடங்கோபத்தை ஏற்றுக்கொள்ளவதற்காகவே என்பதை பார்த்தோம். இன்று இரண்டாம் காரணத்தையும் பார்ப்போம்.

அவரின் பரம தந்தையை பிரியப்படுத்தவே” இயேசு ஏன் மரிப்பதற்காக வந்தார்? என்பதற்கான இரண்டாம் காரணம்.

மனித இனத்தின் மீட்பிற்காக, இயேசு பாடு அனுபவித்து மரிக்க வேண்டும் என்பது கடவுளின் பெரும் திட்டமும் நோக்கமுமாகும். தமது தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் இயேசு நமது காயங்களுக்காக அவர் காயப்பட்டாரெனவும் அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் என்பதை வெளிப்படித்தியுள்ளார்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

ஏசாயா 53:5

இதுவே கடவுளின் திருவுளம் (சித்தம்) எனவும் வேதம் தெளிவுப்படுத்துக்கிறது.

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்

ஏசாயா 53:10a

கடவுளின் இந்த திட்டத்திற்கு இயேசு முற்றிலும் சரணடைவதை நாம் காண்கிறோம். கடவுளின் கோபத்திலிருந்து தப்பிக்க இயேசு இரக்கத்தை நாடவில்லை. இது புதிய ஏற்பாட்டில் ஒரு பெரிய முரண்பாட்டிற்கு வழிவகுக்கிறது. “உலகின் பாவங்களுக்காக” அவர் கடவுளின் கோபத்தை முழுமையாக தாங்கியதால் இயேசு துன்பப்படுகிறார். சிலுவையில், கடவுளின் கோபத்தின் உச்சத்தை உணர்ந்து, இயேசு அழுகிறார்…

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

மத்தேயு 27:46b

எனினும் இயேசு கிறிஸ்துவின் இந்த மகத்தான தியாகம், கடவுளுக்கு உகந்த நறுமணமாகவே அமைந்தது.

1ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:1-2

இது ஒரு முரண் – கடுங்கோபதிற்குள்ளான இயேசு கிறிஸ்து கடவுளால் அளவற்ற அன்புகூரப்பட்டார்; கடவுள் தாமே அவர் மீது கடங்கோபமும் கொண்டார். கடவுளை பிரியப்படுத்தவே , இயேசு கடுங்கோபதிற்குள்ளானவரானார் அதனால் கடவுள் அவரை எல்லைகளை கடந்து அன்புகூர்ந்தார்.

இந்த லெந்துக் காலத்தில் கிறிஸ்துவின் அன்பை பரப்ப அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்து, அவருக்குப் பிரியமான வாழ்க்கையை நடத்த வேண்டும். கடுங்கோபதிற்குள்ளான இயேசு அளவிலாமல் அன்புகூரவும்பட்டார். கடவுளின் சித்தத்தைச் செய்பவர்களான நாமும் அளவிலாமல் கடவுளால் அன்புகூரப்படுகிறோம்.