அப்பா..

பூஉலகில் இருந்திருந்தால்  உங்கள் வயது 83
பிரிந்திருந்து எனக்கு இது 25 ஆவது ஆண்டு
காத்திருந்து என்னை பெற்றாய் 14 ஆண்டுகள் கழிந்து
என்னோடிருந்தது இன்னோர் 14 ஆண்டுகள்

அன்று கற்ற வாழ்க்கைப் பாடம் தான்
இன்று வரை கைகொடுக்கிறது – சூழ்நிலைகளை
வென்றெடுக்க உதவுவது நீங்கள் வாழ்ந்த முறைகள்
என்றும் துணைநிற்பது நீங்கள் ஊட்டிய பண்புகள்

காலை மாலை என காலங்கள் சுழன்றாலும் – என்
மனநிலையில் தோன்றுவதோ உங்கள் நினைவலைகள் – அவை
மலை முகடுகளை மிஞ்சி உயர்ந்த சிந்தனைகள் – அவை
கவலைகள் தோய்வுகள் போக்கும் அன்பின் வார்த்தைகள்

இயேசுவின் வழியே செல் என்றுரைத்தீர்- மரித்தப்பின்
இயேசுவே என் அப்பாவை பிரித்தீர் என்று கேட்டாலும்
இயேசுவின் மேல் விசுவாசம் தவறாது காத்தது உங்கள் வாழ்வே
இயேசுவே காருண்ணியர் அவர் கிருபை பெரியதென உணர்ந்தேன்

கடைசி வாழ்நாளில் ஆலய நிலம் வாங்கியதில் அகம் மகிழ்தீர்
கல்லூரியில் ‘SCM camp’ க்கு மாணக்கர்களை அனுப்பியதால் பூரிப்படைந்தீர்
கடைசி ஜெபத்தில் ‘ஜீவ கிரிடத்தைக்’ கண்டதால் ஸ்தோதிரம் செய்தீர்
கடைசி நொடிப்பொழுதில்…அப்படி ஒன்றுதான் இல்லையே

உங்கள் நற்கிரியை என்னும் வெளிச்சம் என்றும் பிராசிக்கிறது
உணர்வில் கலந்து நெஞ்சில் நிறைந்த ஒளியாய் ஒலியாய் என் ’அப்பா’